கூகுளின் 25% கோடிங்கை எழுதுவது கூகுள் AI டெக்னாலஜி என்றும், வீடியோ கிரியேட்டர்களுக்கு கூகுள் நிறுவனம் டூல்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது என்றும் கூகுள்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, பல துறைகளில் புகுத்தப்பட்ட நிலையில், AI இல்லாமல் எதிர்காலம் என்பது சாத்தியமற்றதாக அமையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, கோடிங் எழுதும் பணி தற்போதுவரை மென்பொருள் இன்ஜினியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது; ஆனால், AI மிக எளிதாகவும் துல்லியமாகவும் கோடிங் செய்ய ஆரம்பித்ததால், பலர் தற்போது AI தொழில்நுட்பத்தை அணுகி வருகின்றனர்.
இந்தக் கட்டமைப்பில், கூகுள் நிறுவனத்தின் கோடிங்கை 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது என்ற தகவலினை சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கூகுளின் ஜெமினி என்ற AI தொழில்நுட்பம், உலகின் பல நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், கூகுள் நிறுவனத்திற்கு கூட பயன்படுத்தப்படுகிறது.
மேலும் வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவுவதற்கான புதிய மேம்பாடுகள் கொண்டு வந்துள்ளது. கூகுளின் புதிய AI தொழில்நுட்பம், யூடியூப் மற்றும் வீடியோ உருவாக்குனர்களுக்கு உதவியாக, புதிய வீடியோ டூல்ஸ்களை வெளியிட்டுள்ளது. இவை பெருமளவில் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
