வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனர்களுக்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில், "இமேஜ் சியர்ச் ஆப்ஷன்" எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இமேஜ் சியர்ச்" என்ற இந்த புதிய அம்சம், மற்ற சியர்ச் வசதிகளைப் போலவே செயல்படும். ஆனால், குறிப்பாக இது ஒரு புகைப்படத்தின் உண்மை நிலைமை அறிய உதவும் என்பதை முக்கியமாக குறிப்பிடலாம். இந்த அம்சத்தை பயன்படுத்த, உங்கள் வாட்ஸ் அப் வழியாக வந்த புகைப்படத்தை திறந்து, அதன் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி "Search on web" எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும். அப்போதும் ஒரு பாப்-அப் விண்டோ தோன்றி, அதில் உள்ள "Search" ஆப்ஷனை அழுத்தினால், கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் துவங்கும்.
இந்த அம்சம், கூகுளுக்கு உங்கள் இமேஜை அனுப்பி, இணையத்தில் பொருத்தமான படங்களை தேடும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த இமேஜின் உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள முடியும். இது கிட்டத்தட்ட கூகுள் இமேஜ் தேடலை போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது, ஆனால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.
