ஏஐ தொழில்நுட்பமான ChatGPT தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ChatGPT நுழைந்து விட்டது என்பதும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ChatGPT தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தருகிறது என்று கூறினால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா../ ஆம் அதுதான் உண்மை. ஸ்போக்கன் இங்கிலீஷ் மட்டும் இன்றி ஸ்போக்கன் ஹிந்தி, ஸ்போக்கன் ஜெர்மன் என அனைத்து மொழிகளையும் சொல்லித் தருகிறது என்றால் மிகப்பெரிய ஆச்சரியம் தான்.
ChatGPT இணையதளத்தை ஓபன் செய்து Put என்ற ஆங்கில வார்த்தையை எப்போது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டால் அது உடனே நமக்கு சொல்லித் தருகிறது. Put என்ற வார்த்தையை எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கிட்டத்தட்ட 10 பதில்களை தருகிறது. அதற்கான உதாரணத்தையும் தருகிறது. அதாவது ChatGPT தந்த பதில் இதுதான்..
1. "Please put the book on the shelf."
2. "He put the keys in his pocket."
3. "They put the chairs around the table."
4. "I put the money in the bank."
5. "She put the dishes in the sink."
6. "The chef put the finishing touches on the dessert."
7. "They put a lot of effort into the project."
8. "He put the blame on his colleague."
9. "She put her trust in him."
10. "The police put the suspect in custody."
ஒரு ஆங்கில ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை விட மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் வேகமாகவும் ChatGPT நமக்கு சொல்லித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ChatGPT மூலம் ஆங்கிலம் மட்டுமன்றி கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் தற்போது பல நகரங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வீட்டில் இருந்து கொண்டே ChatGPT மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் படித்துக் கொள்ளலாம் என்பதும் கொஞ்சம் ஆர்வமும் அக்கறையும் இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
ChatGPT ,

