ChatGPT என்பது ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். இந்த ChatGPT தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நீங்கள் இதுவரை இந்த டெக்னாலஜியை பயன்படுத்தவில்லை என்றால் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்
முதலில் https://openai.com/என்ற இணையதளம் சென்று அதில் ChatGPT என்பதை கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு Login அல்லது Sign up இரண்டு பிரிவுகள் இருக்கும். இதில் உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருந்தால் Login செய்து சென்றுவிடலாம். ஒருவேளை முதல் முதலாக நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால் Sign up செய்ய வேண்டும்.
நீங்கள் உங்களுடைய gmailல் இருந்து கூட Sign up செய்யலாம் அல்லது வேறு இமெயில் முகவரி இருந்தாலும் அதிலிருந்து கூட Sign up செய்யல்லாம். அதன் பிறகு உங்களுடைய பெயர் உள்பட ஒரு சில விபரங்களை கேட்கும். அதனை அடுத்து உங்களது ஈமெயிலுக்கு ஒரு வெரிஃபிகேஷன் லிங்க் வரும். அந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம்.
அதனை அடுத்து ChatGPT பயன்படுத்த கண்டிப்பாக மொபைல் எண் தேவை. உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்தவுடன் உங்கள் மொபைலுக்கு ஒரே ஓடிபி வரும். அந்த ஓடிபியை நீங்கள் பதிவு செய்துவிட்டால் நீங்கள் ChatGPT அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும்.
கணக்கு தொடங்கியவுடன் ChatGPTஐ எப்படி பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு முன்னுரையை ஆரம்பத்திலேயே அது உங்களுக்கு விளக்கமாக அளிக்கும். அதை நீங்கள் படித்து அதன்படி நடந்து கொள்ளலாம்
இதனை அடுத்து கீழே கொடுக்கப்பட்ட ஒரு பாக்ஸில் தான் உங்களுக்கு எந்த துறையில் என்ன சந்தேகம் என்பதை கேட்கலாம். உதாரணமாக நான் யூடியூபில் வீடியோ பதிவு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்டால் அதற்கு விளக்கமாக பதில் அளிக்கும். அதே போல் நீங்கள் எந்த துறையில் உங்களுக்கு சந்தேகம் என்றாலும் அதுகுறித்து கேட்கலாம். உங்களுக்கு டெக்ஸ்ட் வடிவில் அனைத்து விவரங்களும் முழுமையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

