ChatGPT விரைவில் பணம் கேட்குமா? பெய்டு சர்வீஸ் ஆக வாய்ப்பு இருக்கின்றதா?

 AI டெக்னாலஜிகளில் ஒன்றான ChatGPT தற்போதைக்கு இலவசமாக சேவை செய்து வந்தாலும் எதிர்காலத்தில் பணம் கேட்கும் பெய்டு சேவையாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 





உலகம் முழுவதும் தற்போது AI டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பாக ChatGPT தான் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் ChatGPT  தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும் கொடுத்து வருகிறது. 


முதல் கட்டமாக இலவசமாக கொடுத்தாலும் அது பின்னாளில்  பணம் கொடுத்தால் தான் தகவல் கொடுக்கும் ஒரு சேவையாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவதால் மிகப்பெரிய அளவில் தனிமனிதர்கள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் லாபம் அடைகின்றன

அந்த லாபத்தின் ஒரு பகுதியாக ChatGPT பெய்டு சேவையாக மாற்ற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அதே நேரத்தில் கூகுள் உள்பட பல AI டெக்னாலஜி இலவச சேவை ஆகவே செய்து வரும் நிலையில் ChatGPT மட்டும் பணம் கேட்கும் சேவையாக மாறினால் அதன் வாடிக்கையாளர்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் குறைந்த அளவில்தான் பணம் கேட்கும் அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  


மேலும்  ChatGPT தற்போது இலவச சேவை செய்தலும் $9.99 என்ற கட்டணத்திலும் ஒரு சேவை உள்ளது. இதில் இலவச சேவையை விட சில அட்வான்ஸ் பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form