ChatGPT என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

ChatGPT  என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு என்று கூறப்பட்டாலும் அதை முழுமையான பயன்பாடு என்ன? எப்படி அதை பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்





ChatGPT  என்பது நமக்கு உதவி செய்யும் ஒரு பர்சனல் அசிஸ்டன்ட் போல தான். நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை  பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் அல்லது கூகுளில் சென்று தெரிந்து கொள்வோம். ஆனால் அதை ChatGPT இடம் கேட்டால் அது குறித்த முழு தகவல்களையும்  தெரிவிக்கும் ஒரு டெக்னாலஜி தான் ChatGPT 


ChatGPT  என்பது மற்ற இணையதளங்களில் இருந்து அல்லது வேறு கட்டுரைகளில் இருந்தோ அப்படியே காப்பி எடுத்து நமக்கு கொடுக்காது. அது தன்னிடம் உள்ள செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தன்னிடம் உள்ள டேட்டாவை கலந்து ஆலோசித்து ஒரு புதிய வடிவிலான கட்டுரையை கொடுக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. 


நாம் கூகுளில் ஒரு விஷயத்தை தேடினால் ஏற்கனவே ஒருவர் பதிவு செய்த ஒரு கட்டுரையை தான் நாம் படிக்க முடியும். யாரும் இதுவரை கூறாத வகையில் ஒரு புதிய வகையில் ஒரு கட்டுரை நமக்கு தேவை என்றால் நமக்கு ChatGPT தான் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் நீங்கள் சினிமா, மருத்துவம், டெக்னாலஜி, தொழில் துறை, விளையாட்டு என எந்த துறையில் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். நாம் கேட்கும் கேள்விக்கு டெக்ஸ்ட் வடிவில் ChatGPT பதில் தரும் என்பதும் அந்த பதிலும் கிட்டத்தட்ட மனிதனை போல சிந்தித்து தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் ஒரு ஆசிரியரிடமோ அல்லது பேராசிரியரிடமோ ஒரு விஷயம் குறித்து சந்தேகம் கேட்டால் அவர் எப்படி தன்னுடைய அனுபவம் மற்றும் தனக்குள்ள அறிவை பயன்படுத்தி நமக்கு விளக்கம் அளிப்பாரோ, அதுபோல்தான் இந்த ChatGPT தன்னிடம் உள்ள டேட்டாவை பயன்படுத்தி தன்னிடம் உள்ள செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நமக்கு விளக்கமாக அளிக்கும். 

எனவே இதுவரை ChatGPT அளிக்கும் தகவல் யாரும் அளிக்காத விளக்கமாக இருக்கும் என்பது மட்டுமின்றி புதுமையானதாக இருக்கும் என்பதும் கூகுள் சியர்ச்சுக்கும் ChatGPTக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post

Contact Form