OpenAI, Google மற்றும் பிற AI டெக்னாலஜிக்கு போட்டியாக ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு துறையில் களமிறங்குகிறது. அடுத்த ஆண்டு AI தொடர்பான டெக்னாலஜியை வெளியிடும் அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Open AI இன் ChatGPT மற்றும் Google இன் பார்ட் போன்ற AI- அடிப்படையிலான அமைப்புகளான உருவாக்க, "Ajax" என்ற குறியீட்டுப் பெயரில் ஆப்பிள் அதன் சொந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.
அஜாக்ஸ் கூகிள் கிளவுட்டில் இயங்குகிறது என்றும், தேடல் நிறுவனமான இயந்திர கற்றல் கட்டமைப்பான Google JAX உடன் தொடர்புடையது என்றும், ChatGPTக்கு போட்டியாக "Ajax" செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த கேள்விக்கும் ஆப்பிள் பதிலளிக்கவில்லை.
AI உருவாக்கக்கூடிய பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ள நிலையில் AI நிபுணர்களைத் தேடும் பணியில் இறங்கியிருப்பதாகவும், AI பற்றிய வலுவான புரிதல் கொண்ட பொறியாளர்களைத் தேடுகிறது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள், ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சாத்தியமான தனியுரிமை கொள்கைகளை வகுப்பதில் ஆப்பிள் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.



