தூங்கி எழுவது முதல் படுக்கைக்கு செல்லும் வரை.. இனி உங்கள் பர்சனல் அசிஸ்டெண்ட் ChatGPT தான்..!
ChatGPT என்ற AI டெக்னாலஜி தற்போது அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் இந்த டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலும் மிகப்பெரிய அளவில் பெரிய நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் AI டெக்னாலஜி அனைத்து துறைகளில் நுழைந்தது மட்டுமின்றி தனிமனித பணிகளிலும் நுழைந்துவிட்டது. ஒரு மனிதன் தூங்கி எழுந்து தான் செய்ய வேண்டிய வேலை முதல் படுக்கைக்கு செல்லும் வரை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ஞாபகப்படுத்துவது, மற்றும் அனைத்து வேலைக்கு உதவி செய்து வரும் வரை ChatGPT தற்போது மனித வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது
இன்று தூங்கி எழுந்ததும் என்ன எக்சர்சைஸ் செய்யலாம்? எந்த உணவு சாப்பிடலாம்? எந்த உணவு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? எந்த உணவு உடலை பாதிக்கும்? இன்றைய வேலையை செய்வதற்கு என்னென்ன உதவிகள் தேவை? என்பது உள்பட அனைத்து ஐடியாக்களையும் இனி ChatGPTஉஒ; கேட்டுக் கொள்ளலாம்
ChatGPTயும் உங்களுக்கு அசராமல் உங்களுடைய பர்சனல் அசிஸ்டன்ட் போல உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மெருகேறிவிட்டது,
எனவே என் வருங்காலத்தில் ChatGPT உதவியுடன் ஒரு தனி மனிதன் அனைத்து பணிகளையும் செய்துவிடலாம் என்ற காலம் நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. AI என்ற டெக்னாலஜி இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய அற்புதங்களை செய்யும் ஒரு டெக்னாலஜி ஆக மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.



