ChatGPT உதவியால் ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்யலாமா?

 ChatGPT என்ற டெக்னாலஜி தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதை வைத்து கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உள்ள விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு சிலர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்பவர்கள் ChatGPTஐ உதவிக்கு அழைத்ததாகவும் ஆனால் அதில் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். 



பொதுவாக பங்கு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் குறித்த கேள்வி கேட்டால் ChatGPT சரியாக பதில் கூறுவதில்லை. ஏனெனில் அதில் இன்னும் அதற்கான டேட்டாக்கள் இல்லை


ஆனால் அதே நேரத்தில்  பொதுவாக பங்கு மார்க்கெட்டில் பங்கு வர்த்தகத்தில்  ஈடுபடுவது எப்படி? பங்கு வர்த்தகம் செய்யும் போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது? என்னென்ன சரியாக செய்ய வேண்டும்? போன்ற பொதுவான அறிவுரைகளை நமக்கு தருகிறது.


ஆனால் அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்கலாமா? அதை வாங்கினால் எதிர்காலத்தில் நமக்கு லாபம் கிடைக்குமா? நஷ்டம் ஆகுமா? போன்ற  கேள்விகளுக்கு ChatGPT பதில் கூறுவதில்லை.  அதற்கு நாம் பங்குச்சந்தை நிபுணர்களிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பங்கு வர்த்தகத்தின் பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ChatGPTயை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பங்குச்சந்தை நிபுணர்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.


Previous Post Next Post

Contact Form