முடிவுக்கு வருகிறதா கூகுளின் சாம்ராஜ்யம்..? வளர்ந்து வரும் ChatGPT ஆதிக்கம்..!

இதுவரை நாம் ஏதாவது ஒரு விஷயத்தை இன்டர்நெட்டில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கூகுளில் தான் தெரிந்து கொள்வோம். ஆனால் தற்போது உலகம் முழுவதும் ChatGPT டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டதால் கூகுளுக்கு மாற்றாக இந்த டெக்னாலஜி வந்துவிட்டதோ என்ற அச்சம் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவசர அவசரமாக கூகுள் நிறுவனம் பர்டு என்ற ஏஐ டெக்னாலஜியை உருவாக்கி உள்ளது. 



கூகுளில் ஒரு விஷயத்திற்கு தேடினால் அதைப்பற்றி ஏற்கனவே யாராவது பதிவு செய்திருப்பதை தான் நமக்கு கூகுள் காட்டும். ஆனால் ChatGPT டெக்னாலஜி நாம் எந்த விஷயத்தை கேட்கிறோமோ அந்த விஷயம் குறித்து தன்னிடம் உள்ள டேட்டாக்களை பகுத்து அறிந்து தனது செயற்கை  அறிவாற்றல் மூலம்  தொகுத்து நமக்கு ஒரு புதிய விஷயத்தை தருகிறது. இதுவரை யாரும் தராத விளக்கமாக அது இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. 


சாம்பார் வைப்பதிலிருந்து ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்வது வரை அனைத்து விஷயங்களும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். youtube வீடியோ பதிவு செய்ய வேண்டுமா? அதற்கு கண்டெண்ட் கிடைத்துவிடும். மாணவர்கள் ஹோம் ஒர்க் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஐடியில் அனுப்ப பணிபுரிபவர்கள் கோடிங் எழுத வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே ChatGPT நமக்கு செய்து கொடுத்து விடுவதால் கூகுளை விட பல மடங்கு பயனுள்ளதாக இருக்கிறது. 

இதனால் கூகுளின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதாகவும் ChatGPT உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Previous Post Next Post

Contact Form