ChatGPT என்ற டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது என்ற வகையில் இதன் பயன் அதிகம் தான். ஆனால் அதே நேரத்தில் மனிதர்களை சிந்திக்க விடாமல் முழுக்க முழுக்க இதுவே அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து விடுவதால் மனிதர்களின் ஆற்றல் குறைந்து விடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
மனிதர்கள் சிந்திப்பதற்கு பதிலாக ChatGPT டெக்னாலஜி சிந்தித்து அனைத்து விஷயங்களையும் கொடுத்து விடுவதால் மனிதர்கள் புதிதாக கண்டுபிடிப்பதை விட்டுவிடுவார்கள் என்ற ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மாணவர்கள் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றால் ChatGPTயை பயன்படுத்துகிறார்கள், கல்லூரிகளில் ஒரு அசைன்மென்ட் செய்ய வேண்டும் என்றால் ChatGPTயை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள எம்பிஏ மாணவர் ChatGPTயை பயன்படுத்தி தனது அசைன்மென்ட்டை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை அடுத்து சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் ChatGPTயை பயன்படுத்தி எந்தவிதமான அசைன்மென்ட் செய்யக்கூடாது என்றும் அதையும் மீறி ChatGPTயை பயன்படுத்தினால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை உள்பட இந்தியாவில் உள்ள பல கல்லூரிகளில் ChatGPT தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் அதை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மனிதர்களின் மூளைக்கு சவால் விடும் வகையில் ChatGPT இருப்பதால் எதிர்காலத்தில் இது எங்கே போய் முடியும் என்ற கவலை தான் அனைவர் மனதிலும் உள்ளது

