வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தரக்கூட தயார், நல்ல செயற்கை நுண்ணறிவு திறமையுள்ள நிபுணர்கள் தேவை என்று ChatGPT நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்று அச்சப்பட்டாலும் இன்னொரு பக்கத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது என்பதும் உண்மைதான்.
என்னதான் செயற்கை நுண்ணறிவாக செயல்பட்டாலும் அதற்குள் இருக்கும் டேட்டாவை பதிவு செய்வது ஒரு மனிதன் தான். மனிதர்கள் மிகச் சரியாக டேட்டாவை பதிவு செய்தால் மட்டுமே ChatGPT தனது நுண்ணறிவை பயன்படுத்தி சரியான டேட்டாவை கொடுக்கும்.
எனவே டேட்டாவை பதிவு செய்வதற்கும் பதிவு செய்த தகவல்கள் சரியானவை என்பதை கண்டுபிடிப்பதற்கும் ChatGPT திறமையுள்ள நிபுணர்கள் வேலைக்கு அழைக்கப்படுவதாகவும் நல்ல திறமை உள்ளவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கூட சம்பளம் தர தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே வருங்காலத்தில் ChatGPT நிறுவனத்தில் பணிபுரிய ஏராளமான தேவைப்படுவார்கள் என்பதால் அது சம்பந்தமான படிப்பை படிக்கும் இளைஞர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பது உறுதி.
காலம் எந்த போக்கில் போகிறதோ அதன்படி தான் நாமும் போக வேண்டும், அந்த வகையில் இந்த டெக்னாலஜியை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு நல்ல வேலை கிடைக்கும் என்பது உறுதி.

