Chat Gpt என்ற தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டு இதன் ஆதிக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் மனிதனை இந்த தொழில்நுட்பம் மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இன்னொரு தரப்பினரோ எந்த ஒரு டெக்னாலஜி ஆக இருந்தாலும் அந்த டெக்னாலஜியை உருவாக்குவது மனிதன் தான் என்றும் மனித மூளையை மிஞ்சிய டெக்னாலஜி உலகில் வர வாய்ப்பே இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் Chat Gpt டெக்னாலஜியில் இருக்கும் டேட்டா சயின்ஸ் என்பது மனித மூளைக்கு நிகரானது என்று கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் டேட்டாவை கொடுப்பதுதான் டேட்டா சயின்ஸ் என்பது ஆகும்.
டேட்டா சயின்ஸில் டேட்டா அனலிஸ்ட் மற்றும் சயின்டிஸ்ட் ஆகிய இரு பிரிவினர் பணி செய்வார்கள். அனலிஸ்ட் என்பவர் ஒரு நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், அவர்கள் எந்த அளவுக்கு வாங்கும் திறன் உள்ளவர்கள், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய போன் நம்பர் என்ன, இமெயில் என்ன, எந்த முகவரியில் இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை தொகுத்து வழங்குவது தான் அனலிஸ்ட் வேலை.
அனலிஸ்ட் தொகுத்து வழங்கிய தகவல்களை சயிண்டிஸ்ட் வேறொரு வடிவில் பிரித்துக் கொடுப்பார். எந்த பகுதியில் இருந்து அதிகமாக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். எந்த நேரத்தில் அதிகமாக விற்பனை ஆகிறது என்பதை எல்லாம் சயின்டிஸ்ட் வழி வகுத்து கொடுப்பார்
இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அடுத்த கட்ட முடிவை எடுப்பார். உதாரணத்திற்கு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அதிகமாக மதுரையிலிருந்து வாடிக்கையாளர் வருகின்றனர் என்று டேட்டா சயிண்டிஸ்ட் ஒரு அறிக்கையை கொடுத்தால் உடனே மதுரையில் ஒரு கிளை திறப்பதற்கான பணிகளை அந்நிறுவனத்தின் உரிமையாளர் செய்வார். இதுதான் டேட்டா சயின்ஸ்
டேட்டா என்பது தற்போது உலகின் மிக முக்கியமான அம்சமாகும், ஒவ்வொரு துறையும் டேட்டாவை கலெக்ட் செய்ததில் தான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Chat Gptக்கு டேட்டா சயின்ஸ் எப்படி உதவுகிறது Chat Gpt தனது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவை வைத்து தான் ரிசல்ட் தருகிறது. தன்னிடம் இருக்கும் டேட்டாவை வைத்து அதுவாகவே செயற்கையாக சிந்தித்து ஒரு சிறு ரிசல்ட் தருகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அதனிடம் உள்ள டேட்டா தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டேட்டா சயின்ஸ் இல்லாமல் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு விஞ்ஞானமும் இருக்காது என்பது தான் உண்மை.

