ஒவ்வொரு டெக்னாலஜி அறிமுகம் ஆகும்போது மனிதர்களின் வேலைக்கு ஆபத்து என்றும் மனிதர்களின் திறமைக்கு ஆபத்து என்றும் குரல் எழுவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அந்த டெக்னாலஜியை உருவாக்குவது மனிதன் தான் என்பதால் அதைவிட திறமையான டெக்னாலஜியை உருவாக்குபவனும் மனிதன் தான் என்பதால் மனித மூளைக்கு நிகராக எந்த டெக்னாலஜியும் இருக்காது என்பதுதான் இயல்பான உண்மை
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் எவ்வளவு பெரிய டெக்னாலஜி வந்தாலும் மனிதன் மூளைக்கு நிகராக இருக்காது என்றும் மனித மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் மனித மூளைக்கு மிஞ்சிய ஒரு டெக்னாலஜி இல்லை என்று கூறியுள்ளார்.
Chat Gpt என்ற டெக்னாலஜியை எடுத்துக்கொண்டால் அதற்கு டேட்டா பதிவு செய்வது முதல் இயக்குவது வரை அனைத்திற்கும் மனிதனின் மூளை அவசியம்.மனிதன் டேட்டாவை அதில் பதிவு செய்தால் மட்டுமே Chat Gpt இயங்கும் இல்லாவிட்டால் Chat Gpt இயங்க வாய்ப்பே இல்லை
அதனால் எந்த ஒரு டெக்னாலஜி வந்தாலும் மனித மூளைய மிஞ்சுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மனிதனின் வேலையை அது சுலபமாக்கித் தருமே தவிர மனிதனை மிஞ்சுவதற்கு இந்த பூமியில் எந்த டெக்னாலஜியும் இல்லை என்று தான் அறிவார்ந்த விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
Chat Gpt போன்ற டெக்னாலஜியால் மனிதனின் வேலை வாய்ப்பு குறையும் என்ற அச்சம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதுதான் உண்மை என்றும் எந்த ஒரு புதிய டெக்னாலஜி வந்தாலும் இந்த அச்சம் ஏற்படுவது இயல்பு தான் என்றும் ஆனால் போகப்போக மனிதர்களே அதை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

