கூகுளுக்கு ஆப்பு வைக்குமா Chat Gpt.. வாய்ப்பே இல்லை ராஜா..!

Chat Gpt என்ற டெக்னாலஜி தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது கூகுளுக்கு மாற்றாகவும் கூகுளுக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு வளர்ந்து விடும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 



கூகுளும் Chat Gptயை பார்த்து பயந்து தான் பர்ட் டெக்னாலஜி அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் Chat Gpt கூகுளை மிஞ்சி விடுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் நிபுணர்கள் கூறி வருகின்றனர்


தற்போதைய டேட்டாவின்படி Chat Gptயை ஒரு நாளைக்கு பத்து கோடி பேர் பயன்படுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கூகுளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8,900 கோடி. உலகின் மக்கள் தொகையே 800 கோடி தான். ஆனால் அதைவிட பத்து மடங்கு கூகுள் சியர்ச்சில் தேடுகிறார்கள். என்றால் ஒவ்வொருவரும் எத்தனை முறை கூகுள் சியர்ச்சுக்கு வருவார்கள் என்பதை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். 



அது மட்டும் இன்றி கூகுளிடம் இருக்கும் டேட்டாவின் எண்ணிக்கை உலகில் எந்த நிறுவனத்திடமும் இல்லை. உலகின் எந்த நாட்டைச் சேர்ந்த, எந்த நிறுவனத்தைச் சேர்ந்த, எந்த ஒரு தனி நபரையும் சேர்ந்த டேட்டாவை கூகுளில் சென்று எடுத்துவிடலாம். ஆனால் Chat Gptயில் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் டேட்டாவை மட்டும் தான் நான்  எடுக்க முடியும். எனவே கூகுள் மிஞ்சுவதற்கு Chat Gpt மட்டுமல்ல அதற்கு அப்பனே வந்தாலும் முடியாது என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது.

Previous Post Next Post

Contact Form