Chat Gpt என்ற தொழில்நுட்பமே இன்னும் பலரிடம் போய் சேராத நிலையில் அதைவிட அட்வான்ஸாக gpt4 என்ற புதிய டெக்னாலஜி வந்திருப்பது உலகையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Chat Gptயில் ஒரு கேள்வியை டெக்ஸ்ட் மூலம் கேட்டால் பதிலும் டெக்ஸ்ட் மூலம் வரும். ஆனால் gpt4 ல் ஒரு இமேஜை வைத்து கேள்வி கேட்டால் கூட அந்த இமேஜில் இருப்பது என்ன? அந்த இமேஜ் மூலம் என்னென்ன நாம் தெரிந்து கொள்ளலாம் என்பதை டெக்ஸ் மூலம் நமக்கு தெரிவிக்கும். எனவே இனி இமேஜ் மூலமும் கேள்வி கேட்கலாம் என்பதற்கான டெக்னாலஜி gpt4 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் gpt4 என்பது Chat Gptயை விட அட்வான்ஸ் என்பதால் கூடுதலாக நமக்கு தகவல்களை சேகரித்து தரு,. உதாரணத்திற்கு Chat Gpt உதவியுடன் ஒரு தேர்வை எழுதி டெஸ்ட் செய்து பார்த்ததில் அதில் சரியாக பாஸ்மார்க் மட்டுமே கிடைத்தது ஆனால் gpt4 மூலம் தேர்வு எழுதிய போது அது 90 மதிப்பெண்களை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு gpt4 அட்வான்ஸ் டெக்னாலஜியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஜிபிடி போரை விட அட்வான்ஸ் ஆக வேறு ஏதாவது டெக்னாலஜி வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

