ஆப்பிள் நிறுவனம் புதிய "ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்" என்ற தொழில்நுட்பத்தை அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த AI வசதி விரைவில் ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னெச்சரிக்கையாக, "பக் பவுண்டி" எனப்படும் புதிய திட்டத்தை நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆப்பிள் சர்வர்களை ஹேக் செய்ய முயற்சிக்கும் நபருக்கு, ரூ. 8 கோடி) பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிங் (PCC) தளத்தில் இருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து, புதிய AI சேவைக்கு வலுவான பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆப்பிள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மென்பொருள் உருவாக்குநர் மாநாட்டில் ஆப்பிள், "ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்" தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் Siri-யை மேம்படுத்தவும், சாதனங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் செயல் பட்டு வருகிறது. இணையத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆப்பிள் எடுத்து வருகிறது.
பக் பவுண்டி திட்டம் மூலம் ஆப்பிள், தனது PCC உள்கட்டமைப்பில் உள்ள பாதிப்புகளை கண்டறிய நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பங்கேற்பாளர்கள் PCC-யில் பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்து சிக்கல்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்களை அறியலாம். பாதுகாப்பு சிக்கல்களை கண்டறிய அவர்களுக்கு ஆப்பிள் கணிசமான ரிவார்டுகளை வழங்குகிறது.
