இந்தியாவை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்.. இந்த 3 துறைகளுக்கு சிக்கல்?



இந்தியாவில் ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறை நிறுவனங்கள் சைபர் குற்றவாளிகளால் அதிகமாக குறி வைக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாசிட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ள நிலையில் அதில், இந்தியாவில் நடைபெறும் சைபர் தாக்குதல்களில் 80 சதவீதம் நிறுவனங்களை குறிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில், 36 சதவீதம் அரசு துறை மற்றும் 13 சதவீதம் தனியார் துறை நிறுவனங்கள் சைபர் குற்றவாளிகளால் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.

மேலும், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறைகளில் சைபர் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகள் அதிகரித்துள்ளதால், இந்திய தகவல் உள்கட்டமைப்பு சைபர் குற்றவாளிகளின் முதன்மை குறியீடு ஆக மாறியிருக்கிறது.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. 2024-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 46 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

சைபர் குற்றவாளிகள் திருடும் டேட்டாகள், ரகசிய தகவல்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வர்த்தக ரகசியங்கள் அதிகரித்து வருவதாகவும், மால்வேர்   மூலம் இந்த டேட்டாக்களை அவர்கள் திருடுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post

Contact Form