AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஸ்டமர் சர்வீஸை மேம்படுத்தியதன் மூலம், போன்பே நிறுவனம் 600 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து, வீட்டிற்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவியமாக AI தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில், மனிதர்களுக்கு மாற்றாக இது செயல்படத் தொடங்கியுள்ளதால், வேலை வாய்ப்புகள் மிகுந்த அளவிற்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், போன்பே நிறுவனம் தனது கஸ்டமர் சர்வீஸில் முற்றிலும் AI தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதால், 600 ஊழியர்கள் நீக்கப்படுவதாகவும், இன்னும் சிலர் வேலை இழப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறத.
போன்பே நிறுவனத்தில் 1100 கஸ்டமர் சர்வீஸ் ஏஜண்டுகள் இருந்த நிலையில், தற்போது 600 பேர் நீக்கப்பட்டுள்ளனர். AI மூலம் கஸ்டமர் சர்வீசில் 90% மத்தியில் உள்ள வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த நிதியாண்டு முற்போக்கு காட்டி, இந்த நிதியாண்டில் செலவுகள் குறைந்ததாகவும், AI மூலம் கஸ்டமர் சர்வீசு வழங்குவதால் கூடுதல் லாபம் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு AI மிகவும் துல்லியமாகவும், நுட்பமாகவும் பதிலளிக்கிறது. இதனால், மனிதர்களால் வழங்கப்படும் பதில்களைவிட AI மூலம் கிடைக்கும் பதில்களில் வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைவதாக போன்பே நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
போன்பே மட்டும் அல்ல, பல நிறுவனங்கள் கஸ்டமர் சேவைக்கு AI தொழில்நுட்பத்தை நுழைக்க தொடங்கியுள்ளதால், இந்த துறையில் பெரும் வேலை இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
