AI தொழில்நுட்பம் என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ஒருநாள் நமக்கு பதிலாக AI உருவம் அலுவலகம் சென்று நம்முடைய வேலை செய்யும் என்று ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் பல்வேறு ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஜூம் மீட்டிங்கில் ஏஐ உருவம் கலந்து கொண்டதாகவும், அது அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மனிதர்களைப் போலவே கண்ணிமைக்கவும், கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக பதிலை தரும் இந்த AI உருவம் உண்மையில் விஞ்ஞானத்தின் வேறொரு பரிமாணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய அலுவலகத்தின் மீட்டிங்கில் நடக்கும்போது நமக்கு வேறொரு வேலை இருந்தால், இந்த AI உருவத்தை அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளச் செய்யலாம் என்றும், இது நடக்க வெகு நாள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல், நமக்கு பதிலாக நம்முடைய AI உருவம் அலுவலகம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஜூம் நிறுவன தலைவர் தெரிவித்தார்.
மேலும், இந்த AI டெக்னாலஜி குற்றவாளிகளுக்கும் சாதகமாக அமையும் என்றும், AI முகத்தை பயன்படுத்தி 25 மில்லியன் டாலர் மோசடி செய்ய நினைத்த குற்றவாளிகளை ஹாங்காங் காவல்துறை தேடி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய கடினமாக உழைக்க வேண்டும் என்றும், மனிதர்களைப் போலவே AI பேசும் மற்றும் செயல்படும் என்று கூறப்பட்டு வருவதை பார்க்கும் போது, AI மூலம் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ, அதே அளவு தீமையும் இருக்கிறது. நன்மையை மட்டும் மனிதர்கள் பயன்படுத்தினால் பிரச்சனை இருக்காது. ஆனால், தீமையை அதிகமாக பயன்படுத்தினால், AI டெக்னாலஜி மனித குலத்துக்கு மிகப்பெரிய எதிரியாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
