![]() |
இந்தியாவின் ஒரு முக்கிய தொழிலதிபர் சுனில் மிட்டல் குரலை நகலாக்கி, மோசடி செய்ய முயற்சித்ததாக அவர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய தொழில் உலகில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சுனில் மிட்டல் சமீபத்தில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்த விபரீதமான முயற்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு, மோசடிக்கான வாய்ப்புகளை உருவாக்கி வரும் சூழலில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
"எனது குரலை ஏஐ மூலம் உருவாக்கி துபாயில் உள்ள எனது அலுவலகப் பிரதிநிதியை ஏமாற்ற முயற்சித்தனர்.ஒரு பெரிய பணத் தொகையை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று, என்னுடைய குரலில் போலி நபர்கள் பேசியிருப்பதைக் கேட்டபோது அதிர்ச்சியடைந்தேன். எங்கள் அலுவலகப் பிரதிநிதி அதை சரிபார்க்க என்னை தொடர்பு கொண்டபோது, அது போலி குரல் என்பதை உணர்ந்தேன்," என்றார்.
"இது போன்ற மோசடிகள் அதிகரிக்கும் நிலையில், நாம் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் மோசடிகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும்; அதேசமயம், அதனை சரியான முறையில் பயன்படுத்தவும் வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
