சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, உலகளவில் சுமார் 80% சாப்ட்வேர் எஞ்சினியர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் வேகமாக பரவிவருகிறது; சினிமா முதல் மருத்துவம் வரை அனைத்துப் பகுதிகளிலும் அதன் பயன்பாடு மிக நுணுக்கமாக மாறியுள்ளது. ஏற்கனவே பலர் தங்கள் வேலைகளை இழந்த நிலையில், இனி வரும் காலங்களில் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாகி இருக்கலாம் எனவும், 80% சாப்ட்வேர் வேலைகளை இழக்கக் கூடும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் மனிதர்களுடன் இணைந்து செயல்படும்போது, வேலை செயல்திறனை அதிகரிக்கும் என்றாலும், சில வேலைகளை முழுமையாக தானியங்கி முறையில் செய்துவிடும் என்பதால், மனிதர்களின் பங்கை மிகக் குறைக்கும் எனவும் ஆய்வு கூறுகிறது. சில மாற்றங்கள் தேவையான பணிகளுக்கு மட்டுமே மனிதர்களின் உதவி தேவைப்படும்; சாப்ட்வேர் எஞ்சினியர்கள் செய்வதை விட இந்த நுண்ணறிவு வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் வேலை முடிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் வேலைவாய்ப்பு மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகும், 80% வேலைகளும் மெஷின்கள் மூலம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில பிழைகள் இருந்தாலும், அதுவும் விரைவில் சரியாகி, AI தொழில்நுட்பம் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை எனும் கருத்தையும் அந்த ஆய்வு முன்வைக்கிறது.
