கூகுள் ஜெமினியில் கேள்வி பதில் அம்சம்: இனி ஜிமெயிலை கையாள்வது ரொம்ப எளிது..!


கூகுள்  இப்போது, ஐஃபோன் பயனர்களுக்காக ஜிமெயிலில் ஜெமினி AI-வினால் இயக்கப்படும் கேள்வி-பதில் அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது, இது மின்னஞ்சல்களை கண்டறிதல் மற்றும் மேலாண்மை செய்ய மிகவும் எளிதாக்குகிறது. இந்த அம்சம் இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்கனவே கிடைத்தது. இப்போது, ஐஓஎஸ் பயனர்களும் கூகுளின் சமீபத்திய AI நவீன அம்சத்தை ஜிமெயிலில் அனுபவிக்கலாம்.

ஜிமெயில் கேள்வி-பதில் அம்சம் எப்படி செயல்படுகிறது?

சமீபத்திய கேள்வி-பதில் அம்சம் ஜெமினியை நேரடியாக ஜிமெயிலில் உள்ள இன்பாக்ஸ் உடன் இணைக்கிறது, அதில் AI பயன்படுத்தி மின்னஞ்சல்களை எளிதில் கண்டறிந்து, விவரித்து, வடிவமைக்க உதவுகிறது. மேலும், இந்த அம்சத்தை குறிப்பிட்ட நபரிடமிருந்து படிக்காத மின்னஞ்சல்களை கண்டுபிடிக்க அல்லது நிகழ்வு அல்லது கூட்டம் குறித்த தகவல்களை கொண்ட மின்னஞ்சலை தேடுவதற்கான கேள்விகளை கேட்கவும் பயன்படுத்தலாம். எனினும், இந்த அம்சம் ஜெமினி வணிக, நிறுவன, கல்வி மற்றும் கல்வி பிரீமியம் சந்தாக்களுடன் கூகுள் வேலைத் தொகுப்பு  பயனர்களுக்கும், Google One AI பிரீமியம் சந்தா கொண்டவர்களுக்கும் மட்டுமே கிடைக்கிறது. இது ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கிறது.

நீங்கள் மின்னஞ்சல்களை தொடர்பான குறிப்பிட்ட தலைப்பில் சுருக்கமாகக் கேட்கலாம் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புடைய கேள்விக்கான விடையை இணையத்தில் தேடவும் கேட்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் ஜிமெயில் கேள்வி-பதில் அம்சத்தை எப்படி அணுகுவது?

உங்கள் கூகுள் ஒர்க் ஸ்பேஸ் கணக்கைப் பயன்படுத்தி லாகின் செய்து ஜிமெயில் பயன்பாட்டை சமீபத்திய பதிப்பாக மேம்படுத்தவும். நிறுவன பயனர்களுக்கான இந்த அம்சத்தை IT நிர்வாகி தனிப்பயனாக்கல் அமைப்பை இயக்குவதன் மூலம் இயக்க வேண்டும். கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் கூறியது போல், இந்த அம்சம் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது மற்ற அனைத்து பயனர்களுக்கும் 15 நாட்களில் கிடைக்கும். 

இயக்கப்பட்ட பிறகு, பயனர்கள் தங்கள் சாதனங்களில் இதனை அணுகலாம். ஜிமெயிலில் ஜெமினி-யால் இயக்கப்படும் கேள்வி பதில் அம்சம் கிடைக்கின்றால், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மின்னஞ்சலின் மேல்புறம் ஜெமினி லோகோவை காணலாம். அதைப் கிளிக் செய்தால், ஒரு கேள்வி பதில் பகுதி ஓப்பன் ஆகும். இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்களைப் பற்றிய கேள்விகளை கேட்கலாம்.  புதிய மின்னஞ்சல் வடிவமைக்கவும் முடியும்.  

Previous Post Next Post

Contact Form