இனி நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவையில்லை. ஒரு ஏஐ இருந்தால் போதும் சினிமா ரெடி..!


சமீப காலங்களில், ஏ.ஐ. (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல துறைகளில் வேகமாக இடம்பிடித்து வருவதால், சினிமா துறையிலும் அதற்கான தாக்கம் மிக அதிகம் காணப்படுகிறது. இதனால் சினிமா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இடையே, வேலை வாய்ப்புகளைப் பற்றிய அச்சம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, இறந்தவர்களின் குரலை மறுபடியும் பயன்படுத்தி பாடல்கள் உருவாக்குவது அல்லது மறைந்த நடிகர்களை மறு நடிப்பில் கொண்டு வருவது போன்ற சில துறைகளில் மட்டுமே உள்ளது. ஆனால் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் துறைகளில், ஏ.ஐ. தொழில்நுட்பம் பல வகையான தொழில்நுட்ப செயல்பாடுகளில், குறிப்பாக டப்பிங், எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், சினிமா துறையில் பல்வேறு வசதிகள் கிடைத்தாலும், வருங்காலத்தில் கலைஞர்களின் பங்களிப்பு குறையக்கூடும், மேலும் தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்புகள் மறையும் என்ற அச்சம் இருக்கிறது. இது, சினிமா உருவாக்கத்தில் மனிதரின் பங்கினை குறைத்து விடலாம் என்பதால், வேலை இல்லாமை தொடர்பான பல கேள்விகளை எழுப்புகிறது.

அதே நேரத்தில், ஏ.ஐ. தொழில்நுட்பம் பல புதிய ஐடியாக்களை உருவாக்குவதால், தொழில்நுட்பத்துக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுவும், தொடர்புடைய படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால், பலருக்கு வேலை வாய்ப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக நடிகர்கள் மற்றும் டெக்னீசியன் இல்லாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் வருங்காலத்தில் முழுக்க முழுக்க ஏஐ மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்றும் இதனால் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் கூறப்படுவது சினிமா உலகினர்களை பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post

Contact Form