Youtube, Instagram- க்கு வீடியோ வேண்டுமா? மெட்டா AI தரும் அற்புதமான அம்சங்கள்.!


பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் மெட்டா நிறுவனம், தனது புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் "மூவி ஜென்" என்பதை களமிறக்கியுள்ளது. இந்த புரட்சி மிகுந்த அம்சம், பயனர்களின் உத்தரவுகளை அடிப்படையாக கொண்டு யதார்த்தமான வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகளை உருவாக்க முடியும், இது OpenAI மற்றும் ElevenLabs போன்ற முன்னணி வீடியோவை உருவாக்கி தரும் இணையதளங்களுக்கு  போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.

 மெட்டா AI இன் புதிய AI அம்சம் யதார்த்தமான வீடியோக்களை ஒலியுடன் உருவாக்க முடியும் திறன்கள் மற்றும் அம்சங்கள் கொண்டது. என்னென்ன அம்சங்கள் என்பதை பார்ப்போம்.

- யதார்த்தமாக தோன்றும் வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகளை உருவாக்குதல்

- வீடியோ உள்ளடக்கத்திற்கு இணைக்கப்பட்ட பின்னணி இசை மற்றும் ஒலி விளைவுகளை உருவாக்குதல்

- வீடியோக்களை எடிட் செய்யும் திறன்

- 16 விநாடி வரை வீடியோவை உருவாக்குதல்

- 45 விநாடி நீளமுள்ள ஆடியோ கிளிப்புகளை உருவாக்குதல்

மெட்டா ஏஐ அம்சம் என்பது மூவி ஜென், ரன்வே, ஓப்பன் AI, எலெவன் லேப்ஸ் மற்றும் கிளிங் போன்ற ஸ்டார்ட்அப்புகளின் தயாரிப்புகளுக்கு நிகராக செயல்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Contact Form