OpenAIயின் முக்கிய ஆளுமையான டிம் ப்ரூக்ஸ், Google-யின் DeepMindயில் இணைய OpenAIயை விட்டு விலகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
OpenAIயில் ப்ரூக்ஸ், வில்லியம் பீபிள்ஸுடன் இணைந்து "சோரா" என்ற வீடியோ உருவாக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சோரா என்பது வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட AI என்றாலும் இதில் சில தொழில்நுட்ப சவால்கள் இருந்ததால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ப்ரூக்ஸ் இப்போது OpenAIயில் இருந்து Google DeepMindயில் பணியாற்றவுள்ளார். Google-யின் AI ஆராய்ச்சி பிரிவான DeepMindயில் அவர் வீடியோ உருவாக்கும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் விளையாட்டுகள், திரைப்படங்கள் அல்லது AI முகவர்களைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படலாம். DeepMind தலைமை செயல் அதிகாரி டெமிஸ் ஹஸ்சாபிஸ், ப்ரூக்ஸை வரவேற்று, எங்கள் கனவை மெய்ப்படுத்து நபர் எங்களுக்கு கிடைத்துவிட்டார் என்று கூறினார். இவரது வருகையால் DeepMind-ன் Genie போன்ற AI அமைப்புகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Google DeepMindயில் டிம் ப்ரூக்ஸ் என்ன செய்யப் போகிறார்?
Google DeepMindயில், ப்ரூக்ஸ் வீடியோ ஜெனரேஷன் தொழில்நுட்பங்களையும் "உலக சிமுலேட்டர்களையும்" மேம்படுத்துவார். உலக சிமுலேட்டர்கள்" என்பது இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும் இந்த சிமுலேட்டர்கள் விளையாட்டுகள், திரைப்படங்கள், மற்றும் AI பயிற்சிகளில் பயன்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
DeepMind-ன் Genie மாதிரி சமீபத்தில் உருவாக்கப்பட்ட AI, தயாரிக்கப்பட்ட படங்கள், உண்மையான புகைப்படங்கள், அல்லது எளிய வரைபடங்களிலிருந்து முழுமையான உலகங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் வழியாக பயனர் உள்ளடக்கத்தை உருவாக்கி, அதனை ஆராயலாம்.
